Windows Hello என்பது என்ன?
Windows 10
கைரேகைப்பதிவு, முகம் அல்லது கண் அடையாளத்தை பயன்படுத்தி உங்கள் Windows 10 சாதனங்களின் அணுகலை உடனடியாக பெற, Windows Hello மேலும் தனிப்பட்ட, பாதுகாப்பான வழியாகும். கைரேகை படிப்பான்களைக் கொண்ட அநேகமான PCகள் இப்போது Windows Hello-ஐப் பயன்படுத்தத் தயார்,
மேலும் உங்கள் முகத்தையும் கண்மணியையும் அடையாளம் காணக் கூடிய கூடுதல் சாதனங்கள் விரைவில் வருகின்றன. உங்களிடம் Windows Hello-இணக்கமான சாதனம் இருந்தால், அதை எவ்வாறு அமைப்பது என்பது இதோ:
Windows 10 Mobile
Windows Hello என்பது Windows 10 சாதனங்களில் உள்நுழைவதற்கு கூடுதல் தனிப்பட்ட ஒரு வழியாகும். இது உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க, உங்கள் கண்களை அடையாளம் காண்கிறது, அதாவது ஒரு கடவுச்சொல்லைத் தட்டச்சுச் செய்யாமல் எண்டர்பிரைஸ்-நிலை பாதுகாப்பைப் பெறுகிறீர்கள்.
Windows Hello ஆனது எனது தகவலை எவ்வாறு தனிப்பட்டதாக வைக்கிறது?
Windows 10 இயங்குகின்ற சில Lumia தொலைபேசிகள், Windows Hello-ஐப் பயன்படுத்த இப்போது தயாராக உள்ளன. மேலும் கருவிழி அடையாளம் காணுதலைக் கொண்ட கூடுதல் சாதனங்கள் விரைவில் வருகின்றன.
தொடக்கத்தில் எல்லா பயன்பாடுகள் பட்டியலின் மேல் தேய்த்து, பிறகு அமைப்புகள் > கணக்குகள் > உள்நுழைவு விருப்பங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் அமைத்ததும், ஒரு பார்வையில் உங்கள் தொலைபேசியைப் பூட்டுநீக்க முடியும்.